UserName, Password கொடுத்ததால் நம்பி ரூ.55 லட்சம் கொடுத்த நபர் - பேஸ்புக் பயனர்களே உஷார்...!

x

பேஸ்புக் விளம்பரம் மூலம் வங்கி ஊழியரிடம் 55 லட்சம் ரூபாயை நூதன முறையில் மோசடி செய்த இளைஞரை ஆவடி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.சென்னை அம்பத்தூரை சேர்ந்த பாலமுருகன் என்பவர், தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவர் facebook ல் விளம்பரம் ஒன்றை பார்த்து, தொடர்பு கொண்டுள்ளார். அப்போது மறுமுனையில் பேசிய நபர் bitcoin டிரேடிங் பற்றி பேசி, பணம் செலுத்தினால், உடனுக்குடன் லாப தொகை வங்கிக்கு செலுத்தப்படும் எனக்கூறி, USER NAME மற்றும் PASSWORD கொடுத்துள்ளார். இதை நம்பி 55 லட்சத்து 38 ஆயிரம் ரூபாயை பாலமுருகன் கொடுத்துள்ளார். ஆனால், லாப தொகை எதுவும் தராத‌தால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஆவடி சைபர் கிரைமில் புகார் அளித்தார். இதையடுத்து, பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்குகளை ஆய்வு செய்த காவல்துறையினர், ஊரப்பாக்கத்தை சேர்ந்த டோமினிக் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, சமூக வலைத்தளங்களில் வேலைவாய்ப்பு உள்ளதாக கூறி பணம் பறித்து, டெல்லியில் இருக்கும் கும்பலுக்கு கைமாற்றி விடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்