முன்னாள் காதலிக்கு திடீர் திருமணம்..! உருக்கமாக வீடியோ வெளியிட்ட காதலன்! ஆள் வைத்து அடித்த மாப்பிள்ளை தம்பி.. கடைசியில் விபரீத முடிவு..! குமரியில் அதிர்ச்சி

x

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். 31 வயதான இவர் வெளிநாட்டில் தங்கி பணிபுரிந்து வந்த நிலையில், தன் பக்கத்து வீட்டுக்கார பெண் ஒருவரை, காதலித்து வந்தததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென அப்பெண்ணிற்கு அவருடைய வீட்டார் வேறொருவருடன் நிச்சயம் செய்து வைத்ததால், விரக்தியடைந்த சதீஷ்குமார் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பியிருக்கிறார். ஊருக்கு வந்ததில் இருந்தே இளைஞர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் நிலையில், திடீரென தன் முன்னாள் காதலியின் மாப்பிள்ளை வீட்டார் தன்னை தாக்கியதாக கூறி வீடியோ வெளியிட்ட சதீஷ்குமார், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது


Next Story

மேலும் செய்திகள்