என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சோட்டா வினோத். குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை

x

தாம்பரம் அருகே மண்ணிவாக்கத்தை சேர்ந்த ரவுடிகளான சோட்டா வினோத் மற்றும் ரமேஷ் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் இருந்தன. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரை தாக்கியதால், என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து, கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது, ரமேஷ் குடும்பத்தினர், 5ஆம் நாள் காரியம் கழித்து விசாரணைக்கு வருவதாக கூறி வரவில்லை. அதே நேரத்தில், சோட்டா வினோத்தின் தாயார் மற்றும் சகோத‌ர‌ர்கள் ஆஜராகினர். சோட்டா வினோத் இறந்து குறித்த எப்ஐஆர், பிரேத பரிசோதனை அறிக்கை எதுவும் வரவில்லை என அவர்கள் தெரிவித்தனர். மேலும், பொய் வழக்கு போட்டு கைது செய்துவிடுவதாக போலீசார் மிரட்டுவதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இவற்றை பதிவு செய்துகொண்ட கோட்டாட்சியர் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்றும் தெஇரவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்