சாலையில் சென்ற பெண்ணுக்கு `சிறப்பு SI' பாலியல் சீண்டல்.. 2 பெண் பிள்ளைகளுக்கு அப்பா வேறயாம்

x

மயிலாடுதுறையைச் சேர்ந்த பாரதிதாசன், ஜாம் பஜார் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். 58 வயதான இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்துவரும் பாரதிதாசன், ரோந்து பணியின்போது சாலையில் சென்ற பெண்ணை வழிமறித்து ஆபாசமாக பேசியதோடு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்தியதில் பாரதிதாசன் மதுபோதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்