நெல்லையை நடுங்க வைத்த 18 வயது இளம்பெண் படுகொலை... வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

x

நெல்லை டவுன் கீழரத வீதியில் உள்ள ஒரு

பேன்சி ஸ்டோரில் சந்தியா என்ற இளம்பெண் வேலை பார்த்து வந்தார். கடை அருகே உள்ள குடோனுக்கு சென்ற சந்தியா வெகு நேரம் ஆகியும் கடைக்கு திரும்பவில்லை. உடன் பணிபுரியும் பெண்கள் குடோனுக்கு சென்று பார்த்த போது சந்தியா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். தகவலறிந்த போலீசார் சந்தியாவின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலையாளியை கைது செய்ய கோரி சந்தியாவின் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் நெல்லையப்பர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்