திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் - நேரில் வந்து ஆட்சியர் கொடுத்த உத்தரவாதம்

x

நாமக்கல் ராசி புரம் அருகே பெருமாகவுண்டம் பாளையத்தில் சாலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு 70க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..

பெருமாகவுண்டம் பாளையத்தில் சாலையை ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் ஒன்று திரண்டு ஆட்சியர் அலுவலக நுழைவாயிலை முற்றுகையிட்டு திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்... ஆட்சியர் வரும் வரை போராட்டம் தொடரும் எனக்கூறி அவர்கள் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது... ஆட்சியர் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்று இருப்பதால், இருவர் மட்டும் ஆட்சியரை சந்தித்து முறையிட வருமாறு வருவாய் கோட்டாட்சியர் கேட்டுக் கொண்டார். அதை ஏற்காமல் போராட்டக்காரர்கள் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டத்தைத் தொடர்ந்தனர்... இதையடுத்து நாமக்கல் ஆட்சியர் உமா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். வருகிற செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமை நேரில் வந்து சாலை ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும் அதுவரை சாலை புதுப்பிக்கும் பணியை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டுக் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்