அதிமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை - சென்னை அருகே பயங்கரம்

x

பொன்னேரியை அடுத்த விச்சூர் ஊராட்சிமன்ற துணை தலைவர் வைதேகியின் கணவன் சுமன். அதிமுக நிர்வாகியான இவர், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களை செய்து வந்துள்ளார். நேற்று மாலை, அதே பகுதியை சேர்ந்த சிலர் கோயில் திருவிழாவுக்காக பத்திரிக்கை எழுத வேண்டும் எனக்கூறி அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர், சுமரை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடியது. உடலை கைப்பற்றி, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், 5 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஞாயிற்றுக்கிழமை கோயில் திருவிழா தொடர்பாக, அதே ஊரை சேர்ந்த சிலருக்கும் சுமனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. அதனால், படுகொலை செய்யப்பட்டாரா? அல்லது தொழில் போட்டி காரணமா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்