40 ஆண்டுகளுக்கு பிறகு கோயில் கும்பாபிஷேக விழா..

x

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பணித்துறை விநாயகர் கோயில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிறிய கோவிலாக இருந்ததை அகற்றி ஆகமவிதிப்படி புதிதாக கட்டப்பட்ட நிலையில் இன்று இத்திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. இரண்டு கால யாகசாலை பூஜையில் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் பல்வேறு யாக ஹோமங்கள் நடைபெற்றன.சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் அரசு அலுவலர்களும் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்