23 hours.. 2,154 K M டிரைவிங் - சாதனை படைத்த தர்மபுரி பொறியாளர்

x

தர்மபுரியைச் சேர்ந்த பொறியாளர் தென் ஆப்பிரிக்காவில் 2 ஆயிரத்து 154 கிலோ மீட்டர் தூரத்தை 23 மணி நேரத்தில் காரில் கடந்து சாதனை படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் பொறியாளராகப் பணிபுரியும் தினேஷ்குமார், கடந்த மாதம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவரது சாதனைக்கு இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம் கிடைத்துள்ளது. தனது மனைவியிடம் மட்டும் கூறிவிட்டு காரில் சென்றதாகவும், பெற்றோரிடம் கூறி இருந்தால் தடுத்திருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்