தமிழகத்தில் முதன்முறையாக தனியார் ரயில் சேவை... எங்கு தொடங்கி, எங்கு முடியும்?

தமிழகத்தில் முதன்முறையாக தனியார் பங்களிப்புடன் கூடிய ரயில் சேவை கோவையில் இருந்து ஷீரடிக்கு துவங்கப்பட உள்ளது, சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
தமிழகத்தில் முதன்முறையாக தனியார் பங்களிப்புடன் கூடிய ரயில் சேவை கோவையில் இருந்து ஷீரடிக்கு துவங்கப்பட உள்ளது, சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் பாரத் என்ற திட்டத்தின் கீழ் ரயில்வே துறையானது கோவை உட்பட 5 நகரங்களில் இருந்து தனியார் பங்களிப்புடன் சீரடிக்கு ரயில் சேவையை இயக்க அனுமதி அளித்துள்ளது. இதன்படி கோவையில் இருந்து சீரடிக்கும், சீரடியில் இருந்து கோவைக்கும் வாராந்திர ரயில் சேவை தனியார் பங்களிப்புடன் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில், ஆந்திர மாநிலம் மந்த்ராலயம் வழியாக சீரடி செல்ல உள்ளது. இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத துவக்கத்திலோ இச்சேவை அரம்பிக்கப்பட உள்ள நிலையில், இது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், பொதுத் துறை நிறுவனங்கள் தனியார் வசம் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், தமிழகத்தில் முதன்முறையாக கோவையில் இருந்து தனியார் ரயில் சேவை துவங்கப்பட உள்ளது, ரயில்வே தொழிலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்