2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மீது தனி கவனம் செலுத்தவும் - முதல்வர் அறிவுறுத்தல்!

கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்கவேண்டும் என தலைமைசெயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலன் கேட்டுக்கொண்டுள்ளார்.
x
உலக நாடுகளில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம், மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் முதல்வர் அறிவுறுத்தினார். கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சிகிச்சை அளித்தல் ஆகியவற்றை தொடர்ந்து நடைமுறைப்படுத்தவேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டார். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களை கண்டறிந்து மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மெகா தடுப்பூசி முகாம் மூலம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், மாவட்ட அளவில் 100 சதவிகித தடுப்பூசி செலுத்திய உள்ளாட்சி அமைப்புகளை கண்டறிந்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கௌரவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 2ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மீது தனி கவனம் செலுத்தி, அவர்கள் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்