நகராட்சி அலுவலகத்தில் அரபு மொழியில் வைக்கப்பட்ட கண்ணாடி பேழையால் பரபரப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள நகராட்சி அலுவலகத்தில் அரபு மொழியிலான கண்ணாடி பேழை வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
x
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள நகராட்சி அலுவலகத்தில் அரபு மொழியிலான கண்ணாடி பேழை வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேரணாம்பட்டு நகராட்சி ஆணையாளர் சைய்யது உசேன், தன் இருக்கைக்கு பின்புறம், கண்ணாடிப் பேழையில் அரபு மொழியிலான எழுத்துகளை தமிழக அரசு சின்னத்துடன் பதித்து வைத்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, இது குறித்து சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் தரப்பில் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், திடீரென இரவோடு இரவாக நகராட்சி ஊழியர்களால் அந்த கண்ணாடி பேழை அகற்றப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்