"எப்படி, எப்படியோ கனவு கண்டோம்" - இன்னைக்கு ரோட்டுல கல்யாணம்... கல்யாண வீட்டு கவலைகள்

முழு ஊரடங்கு காரணமாக கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் கோயில்களை சுற்றியுள்ள சாலைகளில் நூற்றுக்கனக்கான திருமணங்கள் நடைபெற்றது.
x
முழு ஊரடங்கு காரணமாக கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் கோயில்களை சுற்றியுள்ள சாலைகளில் நூற்றுக்கனக்கான திருமணங்கள் நடைபெற்றது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையில்   வார இறுதி நாட்களான வெள்ளி,சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களிலும் கோயில்கள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் முகூர்த்த தினமான இன்று திருமணங்கள் நடத்த ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டு இருந்தது. கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ஒவ்வொரு முகூர்த்த தினத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது கோயில் மூடப்பட்டுள்ளதால், கோயிலை சுற்றியுள்ள சாலைகளில் போட்டி போட்டி திருமண வீட்டார் இடம் பிடித்தனர். இதனையடுத்து காலை 5 மணி முதல் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் சாலையிலேயே நடைபெற்றது. தங்களது திருமணத்தை மிக பிரமாண்டமாக நடத்த முடிவு செய்திருந்ததாகவும் கொரோனா காரணமாக தற்போது சாலையில் திருமணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக திருமண வீட்டார் வேதனை தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்