திரைப்பட தயாரிப்பாளர் முகமது ரபிக் பெயர் ரவுடிகள் பட்டியலில் இருந்து நீக்கம்

முகமது ரபிக் என்ற ஆதம் பாவா-வின் பெயரை விளக்குத்தூண் காவல் நிலையத்திலுள்ள ரவுடிகள் பட்டியலில் இருந்து நீக்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
x
முகமது ரபிக் என்ற  ஆதம் பாவா-வின் பெயரை விளக்குத்தூண் காவல் நிலையத்திலுள்ள ரவுடிகள் பட்டியலில் இருந்து நீக்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக  முகமது ரபிக் தாக்கல் செய்த மனுவில், தன்மீது தவறுதலாக பதிவு செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு நீக்கப்பட்டதாக தெரிவித்தார். ரவுடிகள் பட்டியலில் உள்ள தனது பெயரை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து  அவரது பெயரை ரவுடிகள் பட்டியலில் இருந்து நீக்க நீதிபதி  உத்தரவிட்டார். நான் ஆன்ட்டி இந்தியன், தப்பாட்டம் போன்ற படங்களின்  தயாரிப்பாளர் முகமது ரபிக் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்