வெளிநாட்டில் மீட்கப்பட்ட சிலைகள் - 1976இல் இருந்து 55 சிலைகள் மீட்பு

நூறு ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட அன்னப்பூரணி தேவி சிலை கனடா நாட்டிலிருந்து மீட்கப்பட்டு, உத்தரபிரதேச அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் மீட்கப்பட்ட சிலைகள் - 1976இல் இருந்து 55 சிலைகள் மீட்பு
x
கடந்த நூற்றாண்டுகளில், கோயில்களில் இருந்து திருடப்பட்ட ஏரளமான புராதனமான சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. 1976ம் ஆண்டிலிருந்து இதுவரை வெளிநாடுகளிலிருந்து பழமையான 55 கோயில் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் 42 சிலைகள், கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் மீட்கப்பட்டு, இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டதாக இந்திய தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட அன்னபூரணி தேவி சிலை, கனடாவில் இருந்து மீட்கப்பட்டு, உத்தரபிரதேச அரசிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. தமிழ்நாட்டிலிருந்து திருடப்பட்ட 2 கோயில் சிலைகள், ஆந்திர மாநிலத்தில் இருந்து திருடப்பட்ட ஒரு கோயில் சிலை, மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து திருடப்பட்ட ஒரு கோயில் சிலை  ஆகியவை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக மத்திய தொல்லியல்துறை தெரிவித்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்