கூட்டுறவு வங்கி நகைக்கடன் முறைகேடு - பொது நகை கடன்களை ஆய்வு செய்ய உத்தரவு

கூட்டுறவு வங்கி நகைக்கடன் முறைகேடு விவகாரத்தில் 5 சவரன் மட்டுமல்லாமல் வங்கிகளில் பெறப்பட்ட 100 சதவீதம் பொது நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு குழுவை அமைத்ததுள்ளது.
கூட்டுறவு வங்கி நகைக்கடன் முறைகேடு - பொது நகை கடன்களை ஆய்வு செய்ய உத்தரவு
x
கூட்டுறவு வங்கி நகைக்கடன் முறைகேடு விவகாரத்தில் 5 சவரன் மட்டுமல்லாமல் வங்கிகளில் பெறப்பட்ட 100 சதவீதம் பொது நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு குழுவை அமைத்ததுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி விவகாரத்தில் ஏராளமான முறைகேடுகள் இருப்பது ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 5 சவரனுக்கு உட்பட்டது மட்டுமில்லாமல் கூட்டுறவு வங்கிகளால் வழங்கப்பட்ட அனைத்து பொது நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்காக கூட்டுறவு சார்பதிவாளர், கூட்டுறவு வங்கியின் சரக மேற்பார்வையாளர், நகை மதிப்பீட்டாளர் கொண்ட குழுவை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குழு  தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் பெறப்பட்ட 100% நகைக்கடன்களை ஆய்வு செய்யும் என்றும், சென்னை மண்டலத்தில் துணைப்பதிவாளர்களை கொண்ட குழு அமைத்து நகைக்கடன்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க  வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து நவம்பர் 21 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.







Next Story

மேலும் செய்திகள்