முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

தமிழகத்தில் 2 ஆயிரத்து 120 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பில் 24 திட்டங்களை தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
x
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டில், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தொழில்துறை சார்பில் ஆயிரத்து 880 கோடியே 54 லட்சம் முதலீட்டில் 39 ஆயிரத்து 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 14 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.  சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சார்பில் 240 கோடி முதலீட்டில்  2 ஆயிரத்து 545 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொத்தத்தில் 2 ஆயிரத்து 120 கோடியே 54 லட்சம் மதிப்பில் 41 ஆயிரத்து 695 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில்  24 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்த முதலீடுகள் சென்னை, காஞ்சிபுரம், மதுரை, சேலம், தூத்துக்குடி, நெல்லை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்