கூட்டுறவு வங்கி- கோடிகளில் நகைக் கடன் மோசடி

கூட்டுறவு நகைக் கடன் மூலம் கோடிக் கணக்கான ரூபாய் மோசடி எவ்வாறு நடந்துள்ளது என்பதை, புள்ளி விவரத்துடன் தமிழக அரசு அம்பலப்படுத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டுறவு வங்கி- கோடிகளில் நகைக் கடன் மோசடி
x
தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில், ஒரே ஆதார் எண் மூலமும், ஒரே குடும்பத்தினர் பல்வேறு கிளைகளிலும் லட்சக் கணக்கில் மோசடி செய்துள்ளதாக கூறியுள்ளது.போலி நகைகளை வைத்தும், ஏ.ஏ.ஒய். ரேஷன் அட்டை மூலமும் நகைக் கடன் பெற்றுள்ளதாகவும், நகைகளே இல்லாமலும், பணத்தை ஏட்டளவில் வரவு வைத்தும் மோசடி நடந்துள்ளது அம்பலமாகி உள்ளது.தமிழக அரசு கண்டுபிடித்த மோசடிகளை பட்டியிட்டுள்ளது. அதில், தூத்துக்குடி குரும்பூர் கூட்டுறவு கடன் சங்கத்தில், 500 நகை பொட்டலங்களில், 261-ல் நகைகள் இல்லை என்றும், அதன் மதிப்பு, ரூ.1.98 கோடி என தெரியவந்துள்ளது.நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் வேளாண் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக் குழு இயக்குநர் கிருஷ்ணசாமி, 11 லட்சத்து 33 ஆயிரத்து 500 ரூபாய்க்கு கவரிங் நகைகள் வைத்து மோசடி செய்துள்ளார். குமரி மாவட்டம் குமாரக்குடியில் ஒரே ஆதார் எண்ணில், பலர், வேறுவேறு தொலைபேசி எண்களை கொடுத்து லட்சக் கணக்கான ரூபாயும், மூஞ்சிறையிலும் மோசடி செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.  கீழ்குளத்தில், ஒரே நபர் 5 சவரன் அடிப்படையில் 625 நகைக் கடன்கள் மூலம், ஒன்றேகால் கோடி ரூபாயும், மற்றொருவர் 647 நகைக்கடன்கள் மூலம்,1.47 கோடியும் நகைக் கடன் பெற்றுள்ளது அம்பலமாகி உள்ளது.  



Next Story

மேலும் செய்திகள்