"சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அன்னதானம்" : "16ஆம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்" - அமைச்சர் சேகர் பாபு
பதிவு : செப்டம்பர் 14, 2021, 04:09 PM
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அன்னதான திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைக்க இருப்பதாக, அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அன்னதான திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைக்க இருப்பதாக, அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மூன்று வேளை அன்னதான திட்டத்தை வரும் 16ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைக்க இருப்பதாக தெரிவித்தார். அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துகளை ஆக்கிரமித்தால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும், இதுவரை 900 கோடி சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 
 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.