'வேக்சின் போடுங்க மக்கா' - "ஒரே நாளில் 25 லட்சம் டோஸ் செலுத்த திட்டம்"

தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி மெகா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து பார்க்கலாம்.
x
தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி மெகா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து பார்க்கலாம்...

மத்திய அரசு தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசிகளை அதிகமாக ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், தமிழக அரசு தடுப்பூசி செலுத்தும் பணியை முடுக்கிவிட்டுள்ளது. 

இதன் ஒரு பகுதியாக, வரும் 12ஆம் தேதி, தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 25 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  

குறித்த காலத்திற்குள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த தவறிய 18 லட்சம் பேருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

45 சுகாதார மாவட்டங்களுக்கும் தடுப்பூசிகள் முறையாக பிரித்தளிக்கப்பட்டு, அன்றைய தினம் கூடுதல் முகாம்களை ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதுதொடர்பாக தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ள அறிவிப்பில், மலைவாழ் பகுதிகள், எல்லையோர மாவட்டங்களில் கூடுதல் தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில், வீடுவீடாக குப்பை சேகரிக்கும் வாகனங்கள் மூலமாக, 'வேக்சின் போடுங்க மக்கா' என்ற பாடல் மூலம், தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்