கருணாநிதிக்கு நினைவிடம் : நினைவிடத்தில் உயரமான பேனாவும் இடம்பெறும்

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த நிலையில், நினைவிடத்தின் மாதிரி வடிவமைப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் .
கருணாநிதிக்கு நினைவிடம் : நினைவிடத்தில் உயரமான பேனாவும் இடம்பெறும்
x
அப்படி கருணாநிதியின் அடையாளமாக பார்க்கப்படுவது... அவர் கையில் இருந்த பேனாவையும் அவரையும் பிரித்து பார்க்க முடியாது என்று சொல்லலாம்... அந்த அளவிற்கு அந்த பேனா மூலம் தமிழர்களுக்காகவும், தமிழர் நலனுக்காகவும் அவர் ஆற்றிய பணி... என்றும் மறவாதவை... 


இந்த நிலையில் கருணாநிதியின் இதயத்தில் கடைசி வரை இடம் பெற்றிருந்த அந்த பேனாவும், அவருக்காக அமைக்கப்பட உள்ள நினைவிடத்தில்... உயரமான பேனாவாக இடம்பெற உள்ளது. 

சட்ட பேரவையில் 110 விதியின் கீழ், இதற்கான அறிவிப்பை வெளியிட்டார், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்... 

மறைந்த கருணாநிதியின் சாதனைகளையும், சிந்தனைகளையும், வருங்கால தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் நவீன விளக்க படங்களுடன் இந்த நினைவிடம் அமைய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

சென்னை காமராஜர் சாலையில் அண்ணா நினைவிட வளாகத்தில் சுமார் 2 புள்ளி 21 ஏக்கர் பரப்பளவில், 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ளது, இந்த நினைவிடம். 

பொது பணி துறை சார்பில் இதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட உள்ள நிலையில்,  நினைவிடம் மாதிரி வடிவமைப்பு வெளியாகி உள்ளது.

மூன்று பிரம்மாண்ட வளைவுகள், முன்னே உயரமான பேனா என்ற வகையில் இந்த கட்டமைப்பு அமைகிறது. 

அண்ணா நினைவிடத்தின் உயரத்துக்கு இணையாக இந்த பேனாவின் உயரம் இருக்கும் என்றும்... பன்முக ஆற்றல் கொண்ட கருணாநிதி, இயல், இசை, நாடகம் என மூன்று துறையிலும் சிறந்து விளங்கியதை உணர்த்தும் வகையில் இந்த வளைவுகள் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது... 

வரலாற்று சிறப்புமிகுந்த அறிவிப்பிற்கு எதிர்கட்சியினர் முதல் பொதுமக்கள் வரை பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்