+2 தேர்வு முடிவுகள் - கணிசமான மாணவர்கள் அதிக மதிப்பெண்கள்

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதால், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் கடும் போட்டி நிலவும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
x
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று திங்கள்கிழமை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 8 லட்சத்து 16 ஆயிரத்து 473 மாணவர்கள் தேர்வெழுத காத்திருந்த நிலையில், அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. அதேசமயம், மதிப்பெண் கணக்கீட்டில், பள்ளி கல்வித்துறை பின்பற்றிய வழிமுறை காரணமாக, 551 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. அதாவது, மொத்த மாணவர்களில் 39,679 பேர் 551 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றுள்ளனர்.  அறிவியல் பிரிவில் கடந்த ஆண்டு,  551 முதல் 600 மதிப்பெண் பெற்ற 1,867 மாணவர்களோடு ஒப்பிடுகையில், தற்போது இந்த எண்ணிக்கை 30 ஆயிரத்து 600ஆக உயர்ந்துள்ளது. மேலும், வணிகவியல் பிரிவில் கடந்த ஆண்டு, 4,437 மாணவர்கள் 551க்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், இம்முறை 8,909 மாணவர்கள் 551 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றுள்ளனர்.ஒரே மாதிரியான கட் ஆப் மதிப்பெண்களை பெறுபவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்பதால், சட்டம், கால்நடை மருத்துவம், மீன்வள பட்டபடிபடிப்புகளுக்கான போட்டி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்