"9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் சேர்க்கை" - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்

9ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
x
சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் போல பாலிடெக்னிக் மாணவர்களும் இரண்டு ஆண்டுகளுக்கான அரியர் தேர்வுகளை, தேர்வுக்கட்டணம் செலுத்தி எழுதலாம் என்று தெரிவித்தார்.  மேலும், உயர்கல்வித் துறைக்கு தேவையான ஆசிரியர்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அண்ணா பல்கலைக் கழகத்தில், வரும் கல்வியாண்டு முதல் 9ஆவது விருப்ப பாடமாக தமிழும் இடம்பெறும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்