"சென்னையில் 18-44 வயதினரில் 5.16% பேருக்கு தடுப்பூசி"- சென்னை மாநகராட்சி

சென்னையில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களில் 5 புள்ளி16 சதவிகிதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
x
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் மொத்தமாக 35 லட்சத்து16 ஆயிரத்து 474 பேர், 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களாக  உள்ளனர். இவர்களில், 1 லட்சத்து 86 ஆயிரத்து 553 பேருக்கு, அதாவது 5 புள்ளி 16 சதவிகிதம் பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக மணலி மண்டலத்தில் 14 புள்ளி 63 சதவிகிதம் பேருக்கும், குறைந்தபட்சமாக திருவிக நகர் மண்டலத்தில் 3 புள்ளி 3 சதவிகிதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால், 18 முதல் 44 வயதினரில், குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. அதே சமயம் 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் 66 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்