தம்பதியினர் வேலை தேடி 5 நாட்களாக கைகுழந்தையுடன் நடை பயணம் - காரில் அழைத்து செல்ல உதவிய மருத்துவர்
பதிவு : ஜூன் 08, 2021, 01:30 PM
கோவையிலிருந்து 5 நாட்களாக கைகுழந்தையுடன் நடந்து வந்த தம்பதியினரை கால்நடை மருத்துவர் ஒருவர் கார் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தார்.
கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்த நவீன் என்பவர் ஊரடங்கால் வேலையின்றி கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். குடும்ப வறுமை காரணமாக அவர் வேலை தேடி சென்னை புறப்பட்டார். சென்னையில் ஹாலோ பிரிக் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் தங்கி வேலை செய்வதற்காக 
நவீன், தனது  மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் கோவையிலிருந்து நடந்தே சென்னை நோக்கி புறப்பட்டு சென்றார். 5 நாட்களாக நடந்து 
சோர்வுடன் காணப்பட்ட அவர்களை வேலூர் அருகே அரசு கால்நடை மருத்துவர் ரவிசங்கர் பார்த்துள்ளார். அந்த தம்பதியரின் பரிதாப நிலையை  கேட்டறிந்த ரவிசங்கர் தனது தொண்டு நிறுவனத்தின் கார் மூலம் 
சென்னை செல்ல ஏற்பாடு செய்தார். கடன் தொல்லை, உணவுக்கு வழியின்றி பிழைப்பு தேடி சென்னை சென்ற அந்த தம்பதிக்கு பணமும் அளித்து ரவிசங்கர் அனுப்பி வைத்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.