முதல்வர் ஸ்டாலினுடன் நடிகர் ரஜினி சந்திப்பு; கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.50 லட்சம் நிதி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
முதல்வர் ஸ்டாலினுடன் நடிகர் ரஜினி சந்திப்பு; கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.50 லட்சம் நிதி
x
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து நிதி அளித்து வருகின்றனர். அதனடிப்படையில் நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி, அரசு கூறியுள்ள அனைத்து வழிமுறைகளையும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும், அப்போதுதான் கொரோனாவை ஒழிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்