என்னை சந்திக்க வரும்போது புத்தகம் போதும்; பூங்கொத்து, பொன்னாடையை தவிர்க்க வேண்டும்.

தன்னை சந்திக்கவும் வாழ்த்து தெரிவிக்கவும் வருபவர்கள் பூங்கொத்து, பொன்னாடையை தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
என்னை சந்திக்க வரும்போது புத்தகம் போதும்; பூங்கொத்து, பொன்னாடையை தவிர்க்க வேண்டும்.
x



பூங்கொத்து, பொன்னாடையை தவிர்த்து புத்தகங்கள் வழங்குங்கள் என தாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதை அறிவீர்கள்" என முதலமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சொந்த தொகுதிக்கு சென்று கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும் என தாம் கேட்டுகொண்டதாகவும் தொகுதிக்கு சென்ற அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சிலருக்கு வரவேற்பு தரப்பட்டதாக தகவல் வருகிறது, அதை முழுமையாக தவிர்க்க வேண்டும் எனவும் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். வரவேற்பு வளைவுகள், பதாகைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் மீறுபவர்களை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கண்டிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். நெருக்கடியான காலகட்டத்தில் மக்களை காப்பாற்றும் பெரும் பொறுப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் செயல்களின் மூலமாக மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடிப்போம்-அன்பை பெறுவோம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்