ஆக்சிஜன் அளவு 96 %-க்கு அதிகமாக இருந்தால் மருத்துவமனையில் சேர வேண்டாம் - சுகாதாரத்துறை அரசாணை

ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 96 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் போது கொரோனா நோயாளிகளை மருத்துமனையில் சேர்க்க வேண்டிய தேவை ஏற்படாது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஆக்சிஜன் அளவு 96 %-க்கு அதிகமாக இருந்தால் மருத்துவமனையில் சேர வேண்டாம் - சுகாதாரத்துறை அரசாணை
x
ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 96 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் போது கொரோனா நோயாளிகளை மருத்துமனையில் சேர்க்க வேண்டிய தேவை ஏற்படாது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு வழங்க வேண்டிய சிகிச்சை குறித்து சுகாதாரத்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய அரசாணையில், நோயாளியின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 96 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் போது, அவரை மருத்துமனையில் சேர்க்க வேண்டிய தேவை ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இவெர்மெக்டின், அசித்ரோமைசின், வைட்டமின் சி, ஜிங்க் மற்றும் ரனிடிடின் போன்ற மருந்துகள் கொடுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் அளவு சீராக குப்புற படுக்கும் முறையை கையாளும்படியும், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 95, 96 சதவீதமாக இருக்கும் போது கூடுதலாக மெத்தில் பிரெட்னல்சோல்னி (Methyl prednlsolne) மற்றும் டெக்ஸா மெதாசோன் மருந்துகளை மருத்துவர்களின் அறிவுரையின்படி எடுத்துக் கொள்ளும்படியும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நோயாளிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டாலும், ஆக்சிஜன் அளவு குறந்தாலும் மருத்துவமனைக்கு செல்லும்படி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நுரையீரல் பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்டால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பெறும் நோயாளியின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 92 சதவீதத்திற்கும் அதிகமாகும் பட்சத்தில், அவரது உடல்நிலை சீராக இருந்தால் 3 நாட்கள் கண்காணித்து டிஸ்சார்ஜ் செய்யலாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்