உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த வைத்தீஸ்வரன் கோவில் குடமுழுக்கு விழா...

உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த வைத்தீஸ்வரன் கோவில் குடமுழுக்கு விழா...
உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த வைத்தீஸ்வரன் கோவில் குடமுழுக்கு விழா...
x
உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த வைத்தீஸ்வரன் கோவில் குடமுழுக்கு விழா... 

சீர்காழி வைத்தியநாத சுவாமி கோவிலில் குடமுழுக்கு விழா பக்தர்கள் இன்றி உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடைபெற்றது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது.சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, கொரோனா பரவல் காரணமாக, பக்தர்கள் பங்கேற்பின்றி குடமுழுக்கு நடைபெற்றது. உயர் நீதிமன்றத்தால் ஐ.ஏ.எஸ் அதிகாரி விக்ராந் ராஜா, உயர்நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆகியோர் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களது கண்காணிப்பின் கீழ் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 144 தடை உத்தரவு போடப்பட்டு இருந்ததால் பக்தர்கள் நகருக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. மேலும் வாகனங்களும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்