"முகவர்களுக்கு கொரோனா சோதனை கட்டாயம்" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று, தமிழக தலைமைதேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
முகவர்களுக்கு கொரோனா சோதனை கட்டாயம் - தமிழக  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
x
வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று, தமிழக  தலைமைதேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் கட்டாயம் முககவசம்  அணிந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.  வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள், முகவர்கள், தடுப்பூசி போட்டிருந்தால், பிசிஆர் சோதனை தேவையில்லை என்றும், தடுப்பூசி போடவில்லை என்றால், வாக்கு எண்ணிக்கைக்கு 72 மணி நேரத்திற்குள் எடுத்துக்கொண்ட, பிசிஆர் சோதனை முடிவுகளை கொண்டு வரவேண்டும் என தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கையின் போது, ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை பதிவு செய்யப்படும் என்றும், வாக்கு எண்ணக்கூடிய அறைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த சிசிடிவி கேமரா பதிவை, கட்டுப்பாட்டு அறை மூலம், தொடர்ந்து கண்காணிக்கப்படும் என தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அவருக்கு மாற்றாக துணை அலுவலர் அந்த பணியை செய்வார் என்று தலைமை தேர்தல் அதிகாரி, சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்