14 பேருக்கு போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 2 காவல் ஆய்வாளர்கள் , ஒரு உதவி ஆய்வாளர் உட்பட 14 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
14 பேருக்கு போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி
x
சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில்  2 காவல் ஆய்வாளர்கள் ,  ஒரு உதவி ஆய்வாளர் உட்பட 14 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆர்கே நகர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர், ராயபுரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு பெண் ஆய்வாளர் மற்றும் ஒரு காவலருக்கு தொற்று பாதிப்பு  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல்  திருவொற்றியூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் , தலைமை காவலர்  உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வரும்  காவலர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பொதுமக்களிடையே  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்