"தேர்தல் வேலை இன்னும் முடியவில்லை" - திமுக தலைவர் ஸ்டாலின்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களை தொடர்ந்து கண்காணித்திட திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
x
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களை தொடர்ந்து கண்காணித்திட திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு அடக்குமுறைகளைச் சமாளித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர், தேர்தல் பணியாற்றி இருப்பது பாராட்டுக்குரியது என குறிப்பிட்டுள்ளார்.  மேலும், வாக்குப்பதிவு முடிந்தது, வாக்குப் பதிவு இயந்திரங்களை காவல் மற்றும் தேர்தல் அதிகாரிகளும் பாதுகாத்துக் கொள்ளட்டும் என திமுக வேட்பாளர்கள் இருந்திட கூடாது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்துடன், இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களை, கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பது நம் தலையாய கடமை என குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், திமுக, கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள், 24 மணி நேரமும் இரவு பகல் பாராது கண் விழித்துப் பாதுகாத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். 

அதேபோல், கவனக்குறைவாக இருந்திடாமல், வாக்கு எண்ணிக்கை நாள் வரை "டர்ன் டியூட்டி அடிப்படையில்" கண்காணித்திட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மேலும், தேர்தல் பணி என்பது தொடரவே செய்கிறது என்பதை மனதில் வைத்து அனைவரும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டுமெனவும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்