தேர்தல் அதிகாரிகளை மிரட்டிய விவகாரம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ முன் ஜாமீன் கோரி மனு

கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி விலக்கு அருகே மார்ச் 12 ஆம் தேதி தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
தேர்தல் அதிகாரிகளை மிரட்டிய விவகாரம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ முன் ஜாமீன் கோரி மனு
x
கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி விலக்கு அருகே மார்ச் 12 ஆம் தேதி தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ வின் வாகனத்தையும் அவர்கள் சோதனையிட முயற்சித்துள்ளனர்,.  இதனைத்தொடர்ந்து  கடம்பூர் ராஜூ, பறக்கும் படைகுழு தலைவரை  மிரட்டியதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் கடம்பூர் ராஜூ மீது   வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க கோரி அமைச்சர் கடம்பூர் ராஜு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். தன் மீது அவதூறு பரப்பும் நோக்கில்  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது,. 

Next Story

மேலும் செய்திகள்