காங். இல்லாமல் புதுவையில் வெற்றி சாத்தியமா? நேர்காணலில் திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி?

காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் புதுச்சேரியில் வெற்றி பெற முடியுமா என்று நிர்வாகிகளிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
காங். இல்லாமல் புதுவையில் வெற்றி சாத்தியமா? நேர்காணலில் திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி?
x
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த புதுச்சேரி திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் நேர்காணல் நடத்தி உள்ளார். அப்போது, காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இல்லாத பட்சத்தில், திமுக வெற்றி வாய்ப்பு எந்த அளவு உள்ளது என அவர் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. மேலும், திமுக தலைமையில், புதுச்சேரியில் தேர்தலை சந்திக்க வேண்டும் என நேர்காணலின்போது நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர். மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 18 தொகுதிகளில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் போட்டியிட வேண்டும் என்றும், அவர்கள் கூறிச்சென்று உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்