மா.கம்யூ., கட்சிக்கு 7 தொகுதிகள்? 10 தொகுதிகள் கேட்கும் மா.கம்யூ., கட்சி

திமுகவுடன் தொகுதி பங்கீடு முடிவடையாத நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து நாளை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட இருக்கிறது.
x
திமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 7 இடங்களை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், குறைந்தப்பட்சம் 10 இடங்களாவது வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிலைப்பாடாக இருக்கிறது. இதற்கு திமுக தயாராக இல்லாத நிலையில், எந்த விதமான முடிவை எடுப்பது என்பது குறித்து ஆலோசிக்க நாளை அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தியாகராய நகரில் கட்சி அலுவலகத்தில் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்துக் கொள்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்