"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்" - சசிகலா பரபரப்பு அறிக்கை

அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிவித்துள்ளார். திமுகவை ஆட்சியில் அமர விடக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் - சசிகலா பரபரப்பு அறிக்கை
x
அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிவித்துள்ளார். திமுகவை ஆட்சியில் அமர விடக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.  தீவிர அரசியலில் சசிகலா இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று இரவு அவர் வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில்  பதவிக்காகவோ, அதிகாரத்திற்காகவோ தான்ஆசைப்பட்டதில்லை என கூறியுள்ளார். ஜெயலலிதா உயிருடன் இருந்த போது, அவரது எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக 
எப்படி இருந்தேனோ,  அப்படித்தான் அவர்  மறைந்த பிறகும் இருப்பதாகவும் சசிகலா கூறியுள்ளார்.

தன் மீது அன்பும், அக்கறையும் காட்டிய ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் மற்றும் நல்ல உள்ளங்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ள சசிகலா, தமிழக மக்களுக்கும் ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன் எனவும் கூறியுள்ளார். வருகிற தேர்தலில், பொது எதிரியான திமுகவை ஆட்சியில் அமர விடக் கூடாது என ஆதரவாளர்களை கேட்டுக் கொண்டுள்ள சசிகலா, அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் தேர்தலில் பணியாற்ற வேண்டும்  என்றும் வலியுறுத்தி உள்ளார்.  அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து, ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கப்போவதாகவும் சசிகலா கூறியுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்