நடந்து சென்ற பெண்ணிடம் பணப்பை திருட்டு - ஒற்றை ஆளாய் நின்று கெத்து காட்டிய இளைஞர்

சென்னையில் பெண்ணிடம் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பலை தனி ஒருவராக இளைஞர் ஒருவர் விரட்டி சென்று கெத்து காட்டி இருக்கிறார். அந்த அந்த இளைஞர், என்ன நடந்தது?
நடந்து சென்ற பெண்ணிடம் பணப்பை திருட்டு - ஒற்றை ஆளாய் நின்று கெத்து காட்டிய இளைஞர்
x
சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வருபவர் சங்கர். இவரது இரண்டாவது மகனான கார்த்திக், பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு இளங்கலை படித்து வருகிறார். சம்பவத்தன்று ஜோசியர் தெரு அருகே இருசக்கர வாகனத்தில் கார்த்திக் வந்த போது தான் அந்த விபரீத சம்பவம் நடந்தது. சாலையில் குழந்தையுடன் வந்த பெண்ணிடம் இருந்த பையை இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர்  பறித்துச் சென்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் பதறிப்போன அந்த பெண் கூச்சலிட்டாலும் கூட, பறிபோன பையை அவரால் மீட்க முடியவில்லை. இதனை எதிர்திசையில் இருந்தபடி பார்த்த கார்த்திக், துரிதமாக செயல்பட தொடங்கி உள்ளார். கொள்ளையர்களை தன் இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்ற கார்த்திக், பல சாலைகளை கடந்தும் பின்தொடர்ந்தார். 

ஒரு கட்டத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த கொள்ளையனின் சட்டையை துணிச்சலாக பிடித்து கீழே தள்ளினார் கார்த்திக்... இதில் இருவரும் நிலை தடுமாறி மரத்தில் மோதி கீழே விழுந்தனர். பின்னர் சுதாரித்து எழுந்த அவர்களிடம் கத்தி இருப்பதை கண்டார் கார்த்திக். ஆனாலும்  பயம் கொஞ்சமும் இன்றி அவர்கள் கத்தியை எடுப்பதற்கு முன்பாக தன் கையை ஆயுதமாக்கி அவர்களை தாக்க தொடங்கினார். இதில் மற்றொரு கொள்ளையன் தப்பி ஓடிய நிலையில் பிடிபட்ட கொள்ளையனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார் அவர். விசாரணையில் பெண்ணிடம் இருந்து பணத்தை பறித்துச் சென்றது சைதாப்பேட்டையை சேர்ந்த முக்தர் உசேன் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து ஒரு லட்ச ரூபாய் பணம் இருந்த பையை மீட்ட கார்த்திக், அதை பெண்ணிடம் ஒப்படைத்தார். 

கல்லூரி மாணவன் ஒரே நாளில் ஹீரோவாக உருவெடுத்ததற்கு அவருக்கு கைகொடுத்தது குத்துச்சண்டை பயிற்சி தானாம்... சிறு வயதில் இருந்தே எதையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் இவர், இப்போது கத்தியை காட்டி மிரட்டிய கொள்ளையனையே ஆட்டம் காண வைத்திருக்கிறார். போலீசில் சேர வேண்டும் என்பதே கார்த்திக்கின் விருப்பமாம். போலீசார் நடத்திய விசாரணையில் பெண்ணிடம் பணம் பறித்த மற்றொரு நபர் பெரம்பூரை சேர்ந்த ஹாலீத் என்பது தெரியவந்தது. கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் மீதும் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தனக்காக யோசிக்கும் மக்களுக்கு மத்தியில் தன் உயிரை பணயம் வைத்து செயல்பட்ட இளைஞர், இன்று மக்களால் ஒரு ஹீரோவாக பார்க்கப்படுகிறார்...

Next Story

மேலும் செய்திகள்