பெட்ரோல் - டீசல் விலை 30 காசுகள் உயர்வு

சென்னையில் பெட்ரோல் விலை விட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து 91 ரூபாய் 98 காசுகளாக உள்ளது.
பெட்ரோல் - டீசல் விலை 30 காசுகள் உயர்வு
x
சென்னையில் பெட்ரோல் விலை விட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து 91 ரூபாய் 98 காசுகளாக உள்ளது. அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து 85 ரூபாய் 31 காசுகளாக உள்ளது. அதிகபட்சமாக கடலூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய் 70 காசுகளாவும், டீசல் விலை 86 ரூபாய் 99 காசுகளாகவும் உள்ளது.

ராஜஸ்தானில் அசுர வேகத்தில் பெட்ரோல் விலை - ஒரு லிட்டர் ரூ.100யை தாண்டியது

ராஜஸ்தானில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது. எரிபொருளுக்கு அதிக வரி விதிக்கும் மாநிலங்களில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில், அதிக வரிவிதிக்கும் மாநிலமான ராஜஸ்தானில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 101 ஐ தாண்டியுள்ளது. அதே நேரத்தில் அங்கு சாதாரண பெட்ரோல் விலை 98 ரூபாய் 40 பைசாவாக உள்ளது. டெல்லியில் பெட்ரோல் விலை 89 ரூபாய்10 பைசாவும், மும்பையில் 95 ரூபாய் 61 பைசாவும் உள்ளது.பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்