3 பேரை கொன்ற யானை 'சங்கர்' பிடிபட்டது - கும்கி யானைகளின் உதவியுடன் நடவடிக்கை

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் மூன்று பேரை கொன்ற காட்டு யானை சங்கரை மயக்க மருந்து செலுத்தி வனத்துறையினர் பிடித்துள்ளனர்.
3 பேரை கொன்ற யானை சங்கர் பிடிபட்டது - கும்கி யானைகளின் உதவியுடன் நடவடிக்கை
x
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் மூன்று பேரை கொன்ற காட்டு யானை சங்கரை மயக்க மருந்து செலுத்தி வனத்துறையினர் பிடித்துள்ளனர்.

யானை சங்கரை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக கடந்த 8 நாட்களாக வனத்துறையினர் போராடி வந்தனர். வனத்துறையினரின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததை அடுத்து, புது வியூகங்களை வனத்துறையினர் வகுத்தனர். அதன் படி, யானையை பிடிப்பதற்காக 10 லைன் சுடுகாடு வனப்பகுதியில் உள்ள இரண்டு மரங்களின் மீது  பரண் அமைக்கப்பட்டது. மேலும், மரத்தின் கீழ் அதிக வாசனை உள்ள பழங்களும் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அங்கு தனது கூட்டத்துடன் வந்த யானை 'சங்கர்' மீது பரண் மீதிருந்த வனத்துறையினர் துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தினர். இதையடுத்து, கும்கி யானைகளின் உதவியுடன் மற்ற யானைகள் விரட்டப்பட்டன. இதை தொடர்ந்து, யானை சங்கரை  லாரியில் ஏற்றி முதுமலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூண்டில் அடைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 



Next Story

மேலும் செய்திகள்