மகளின் திருமணத்திற்கு சிலையாய் வந்த தந்தை - நெகிழ்ச்சி சம்பவம்

பட்டுக்கோட்டை அருகே 8 ஆண்டுகளுக்கு முன் இறந்த தந்தை, திடீரென மணமேடையில் தோன்றியதால், மணமகள் உள்பட குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்த சம்பவம், நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
மகளின் திருமணத்திற்கு சிலையாய் வந்த தந்தை - நெகிழ்ச்சி சம்பவம்
x
பட்டுக்கோட்டை அருகே 8 ஆண்டுகளுக்கு முன் இறந்த தந்தை, திடீரென மணமேடையில் தோன்றியதால், மணமகள் உள்பட குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்த சம்பவம், நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

ஒவ்வொரு பெண் பிள்ளைக்கும் எப்போதும் ஹீரோ அவரது அப்பா தான். வாழ்க்கையில் ஒவ்வொரு படியை எடுத்து வைக்கும்போதும் தன் அப்பா உடன் இருக்கவேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு என்றும் இருக்கும். இதேபோன்று மணப்பெண் ஒருவருக்கு இருந்த ஆசையை நிறைவேற்றி கொடுத்திருக்கிறது ஒரு குடும்பம்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் செல்வம். தன்னுடைய முதல் இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்து வைத்த செல்வம் , 2012 ஆண்டு எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்தார். இதனிடையே இவரின் மூன்றாவது மகளான லட்சுமி பிரபாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது . வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சியால் குடும்பமே சந்தோசத்தில் இருந்தாலும், செல்வம் இல்லாத குறை அவர்களை வாட்டியது.  தன் திருமணத்தை பார்க்க அப்பா இல்லையே என்ற ஏக்கமும் மணமகள் லட்சுமி பிரபாவுக்கு வேதனையை தந்தது. 

குடும்பத்தின் ஏக்கத்தை போக்க நினைத்த லட்சுமிபிரபாவின் சகோதரிகள், தனது அப்பா செல்வத்தை சிலையாய் வடித்து மணமேடையில் கொண்டுவரத் திட்டமிட்டனர். இதற்காக 6 லட்சம் ரூபாய் செலவில் செல்வத்தை போலவே அச்சு அசலான சிலிக்கான் சிலையை வடிவமைத்து மணமேடையில் நிறுத்தினர். தந்தை இல்லாத ஏக்கத்துடன் மணமேடைக்கு வந்த லட்சுமி பிரபா, அங்கிருந்த சிலையை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தார். சிலைமுன் மாலை மாற்றிக்கொண்ட மணமக்கள், தன் தந்தையே எதிரே நிற்பதாக பாவித்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர். சிலையுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட குடும்பத்தினர், தந்தையே திருமணத்தில் கலந்து கொண்டது போல மகிழ்ச்சியில் திளைத்தனர். இந்த காட்சிகளை பார்த்த திருமணத்திற்கு வந்தவர்கள்,  இறந்த தந்தை மீது பெண் பிள்ளைகள் வைத்திருந்த பாசத்தை கண்டு நெகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்