"உதயநிதி ஒரு பக்குவமில்லாத குழந்தை" - கே.பி. முனுசாமி

சிறுபிள்ளைக்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை என உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.
உதயநிதி ஒரு பக்குவமில்லாத குழந்தை - கே.பி. முனுசாமி
x
சிறுபிள்ளைக்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை என உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு கே.பி. முனுசாமி கூறியுள்ளார். சென்னை மணலியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர், செய்தியாளர்களிடம் பேசினார். முதல்வர் குறித்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு பதிலளித்த அவர், சிறு பிள்ளைகளுக்கு எல்லாம் பதில் கூறத் தேவையில்லை என்றார். பக்குவமில்லாத சிறு பிள்ளை உதயநிதி என்ற கே.பி. முனுசாமி, அவரது பேச்சுக்கு பதிலளிக்க தேவையில்லை என்றார்.

Next Story

மேலும் செய்திகள்