தாய் பாசம் கிடைக்காத விரக்தியில் இளம்பெண் தற்கொலை
பதிவு : ஜனவரி 05, 2021, 10:14 AM
சென்னையில் தாய் பாசம் கிடைக்காத விரக்தியில் இளம்பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது...
சென்னை கொரட்டூரை சேர்ந்தவர்  சண்முகம். சுயதொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுக்கு 3 பெண் பிள்ளைகள். 

இதில் 2 வது மகள் ரேவதி. 27 வயதான இவர், ப்ளஸ் 2 முடித்து விட்டு தன் வீட்டிலேயே எம்ப்ராய்டரி, டெய்லரிங் உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தார். முதல் மற்றும் 3வது மகள்களுக்கு திருமணம் ஆன நிலையில் ரேவதி மட்டும் தன் பெற்றோருடன் வசித்து வந்தார். 

இதனிடையே தன் வீட்டின் படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் ரேவதி. சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய போலீசார், ரேவதி எழுதியதாக கூறப்படும் 3 பக்க கடிதத்தை கைப்பற்றினர்.

3 பிள்ளைகளாக ஒன்றாக வீட்டில் வளர்ந்த போதிலும், பெற்றோர் தன் மீது வெறுப்பு காட்டி வந்ததாக ரேவதி, அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. 

ஒரு மகளாக தன்னை அவர்கள் ஏற்றுக் கொள்ளவே இல்லை என்றும், தனக்கு தாய்ப்பாசம் என்பதே கிடைக்கவில்லை என உருக்கமாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ரேவதி. 

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

266 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

213 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

176 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

142 views

பிற செய்திகள்

எம்பிசியில் உள்ஒதுக்கீடுக்கு தடை கோரி வழக்கு - மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் சாதி ரீதியில் உள் ஒதுக்கீடு வழங்க தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

31 views

அரசு பள்ளிகளில் பயிற்சி மையங்கள் அமைக்க, எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ?- தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் அமைக்க, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

13 views

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப். 2ந் தேதி கூடுகிறது

தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 2ந் தேதி கூட உள்ளது.

10 views

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - தேர்தல் பிரச்சாரம் குறித்து ஆலோசனை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

12 views

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு - சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

சொந்த ஊர் திரும்பிய நடராஜனுக்கு கிராம மக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

117 views

மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்

இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த தமிழக மீனவர்கள் 4 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.