தமிழகத்தின் அடையாளம் சேவல் சண்டை

தமிழகத்தின் பெருமையும் அடையாளமுமாக விளங்கி வரும் சேவல் சண்டைக்கு, கள வீரர்களான சேவல்களை எவ்வாறு தயார் படுத்துகின்றனர் என்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.
தமிழகத்தின் அடையாளம் சேவல் சண்டை
x
கறுப்புறு மனமும் கண்ணில் சிவப்புறு சூட்டும் காட்டி
உறுப்புறு படையின் தாக்கி உறுபகை இன்றி சீற- என்று கம்ப ராமாயணப் பாடலிலேயே இடம் பிடித்திருக்கிறது, சேவல் சண்டை...

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சேவல் கட்டு எனப்படும் சேவல் சண்டை, கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக கரூர் மாவட்டம் பூலாம்வலசு பகுதியில், பொங்கல்  பண்டிகையின்போது,  விமர்சையாக நடைபெற்று வருகிறது.        

2014ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் சேவல் காலில் கட்டிய கத்தி பட்டு இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து கடந்த 2015  முதல் 2018 ஆம் ஆண்டு வரை இப்போட்டிக்கு மாவட்ட ஆட்சியரால் தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நிபந்தனைகளோடு  2019ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டிகளில் பங்கேற்பதற்காக தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சேவல்களை அழைத்து வருவார்கள்.

Next Story

மேலும் செய்திகள்