ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சிறுபான்மையினர் பிரிவு சார்பில் மாநாடு

தி.மு.க.-வின் மாநாட்டில் பங்கேற்க ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் ஓவைசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் பரவிய நிலையில், தோழமை கட்சித் தலைவர்களுக்கு மட்டுமே அழைப்பு என தி.மு.க விளக்கம் அளித்துள்ளது.
ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சிறுபான்மையினர் பிரிவு சார்பில் மாநாடு
x
சென்னையில் வரும் 6ஆம் தேதி திமுக சிறுபான்மை நல பிரிவு சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு, "இதயங்களை இணைப்போம்" என பெயரிடப்பட்டுள்ளது.  இந்நிலையில், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசியை, திமுகவின் சிறுபான்மை நல பிரிவு மாநிலச் செயலாளர் மஸ்தான், ஐதராபாத்தில் சந்தித்ததாக தகவல் வெளியானது.

திமுக சிறுபான்மை நல பிரிவு சார்பில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க வருமாறு, ஓவைசிக்கு அழைப்பு விடுத்ததாக தகவல் பரவியது. இதற்கு தி.மு.க. சிறுபான்மை நல உரிமைப் பிரிவுச் செயலாளர் மஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளார். மாநாட்டில் பங்கேற்க எப்போதும் போல் தி.மு.க.வின் தோழமை கட்சித் தலைவர்கள் மட்டுமே சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர் என மஸ்தான் அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்