லண்டனில் இருந்து திரும்பியவருக்கு கொரோனா - புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகள்

தேனி மாவட்டத்தில் லண்டனில் இருந்து திரும்பியவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், புதிய வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
லண்டனில் இருந்து திரும்பியவருக்கு கொரோனா - புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகள்
x
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ், அதிவேகமாக பரவும் வகையில் புதிய அவதாரம் எடுத்துள்ளது. இதையடுத்து, இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்புபவர்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களில் தேனி மாவட்டம் திரும்பிய 17 பேர், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 36 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 20ந்தேதி மனைவி மற்றும் குடும்பத்தினருடன் அவர் வீடு திரும்பிய நிலையில், மற்றவர்களுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தொற்று உறுதியானவருக்கு புதிய வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய, அவரிடம் பெறப்பட்ட மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்