ஜூலை மாதம் என்எல்சியில் நடந்த விபத்தில் 20 பேர் பலி - நிபுணர் குழு அமைத்து நடத்திய விசாரணை அறிக்கை தாக்கல்
பதிவு : டிசம்பர் 25, 2020, 09:00 PM
என்.எல்.சி. அனல்மின் நிலைய விபத்தில் 20 பேர் பலியானதற்கு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என விசாரணை குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜுலை மாதம் ஒன்றாம் தேதி நெய்வேலியில் செயல்படும் என்.எல்.சி. அனல் மின் நிலையத்தின் இரண்டாவது சுரங்கத்தில் அதிக திறன் கொண்ட பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 20 தொழிலாளர்கள் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்தில் மேலும் பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றனர். இதனிடையே இந்த விபத்து குறித்து ஆராய்வதற்கு ஏற்கனவே என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

ஆனால் அந்த குழு சமர்ப்பிக்கும் அறிக்கையை என்.எல்.சி. நிர்வாகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தர மறுப்பு தெரிவித்திருந்தது. தொடர்ந்து இந்த விபத்து தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வந்தது. அந்த வழக்கில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டு, விபத்துக்கு என்ன காரணம்? யார் காரணம்? என்பது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தது. 

அடுத்த 6 மாதத்திற்குள் அனல்மின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கவும் இந்த விசாரணைக்குழு ஆணையிட்டிருந்தது. இந்நிலையில் அந்த குழுவானது என்.எல்.சி. அனல்மின் நிலைய விபத்து தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. 

அதில் அனல்மின் நிலைய விபத்தில் 20 பேர் உயிரிழந்ததற்கு என்.எல்.சி. நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அனல்மின் நிலையத்தில் உள்ள பாய்லர்களில் பணியாற்றுபவர்கள் கொதிகலனை கையாள தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்ட ஊழியர்களை மட்டுமே கொதிகலனை சுத்தம் செய்யவதற்கு பயன்படுத்தியிருக்க வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் கொதிக்கலனை சரிவர கையாள தெரியாத ஊழியர்களை அந்த பணியில் ஈடுபடுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அனல்மின் நிலைய கொதிகலனை துய்மைப்படுத்துவதற்கு தனி வழிகாட்டு நெறிமுறைகள் இல்லை எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஜாக்கிசானின் "வாங்கார்ட்" பட டிரெய்லர் - நடிகர் மாதவன் வெளியீடு

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் வாங்கார்ட் படத்தின் டிரெய்லரை நடிகர் மாதவன் வெளியிடுகிறார்.

64 views

(25/12/2020) ஆயுத எழுத்து - நெருங்கும் தேர்தலும்... உருமாறும் பிரசாரங்களும்...

சிறப்பு விருந்தினர்களாக : பரந்தாமன், திமுக || ஜவகர் அலி, அதிமுக || ஜெகதீஷ், சமூக ஆர்வலர் || சி.கே.குமரவேல், மக்கள் நீதி மய்யம்

47 views

பிற செய்திகள்

கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டாம் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

36 views

9ஆம் வகுப்பிற்கு பாடத்திட்டங்கள் குறைப்பு - 50% வரை பாடத்திட்டங்கள் குறைப்பு

ஒன்பதாம் வகுப்பிற்கு 50 சதவீதம் வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன.10 மற்றும் 12ஆம் வகுப்புகளை தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

36 views

சைக்கிள் மீது கார் கொடூர மோதல் - சி.சி.டி.வி. வெளியீடு

திருவாரூரில் சைக்கிளில் சென்ற முதியவர் மீது கார் மோதிய சி.சி.டி.வி. காட்சி வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

333 views

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது"மருத்துவமனை புதிய தகவல்

சசிகலா உடல்நிலை குறித்து கர்நாடகா அரசு மருத்துவமனை புதிய தகவல் வெளியிட்டுள்ளது.

56 views

குடியரசு தின விழா ஏற்பாடுகள் தீவிரம் - சென்ட்ரலில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை

குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

32 views

ஒயிலாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழா - சிறுவர், சிறுமியர் ஒயிலாட்டம் ஆடி அசத்தல்

கோவை மாவட்டம் கள்ளிப்பாளைத்தில், பயிற்சி முடித்த ஒயிலாட்டக் கலைஞர்களின் அரங்கேற்ற விழா நடந்தது.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.