"ஸ்மார்ட் சிட்டி என்ற அரசின் கொள்கை முடிவில் தடையிட முடியாது" - நோட்டீசை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம்

ஈரோடு பேருந்து நிலையத்தில், கடைகளை காலி செய்ய அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஈரோட்டில், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஸ்மார்ட் சிட்டி என்ற அரசின் கொள்கை முடிவில் தடையிட முடியாது - நோட்டீசை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம்
x
ஈரோடு பேருந்து நிலையத்தில், கடைகளை காலி செய்ய அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஈரோட்டில், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை அகற்றுமாறு, உரிமம் பெற்ற கடைகளுக்கு, மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து, கடை உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம், தள்ளுபடி செய்துள்ளது. அரசின் கொள்கை முடிவில், தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 34 பேர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2025ஆம் ஆண்டு வரை உரிமம் பெற்ற நிலையில், தற்போது காலி செய்தால், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்