கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸ் விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
x
புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் இயேசுவின் பிறப்பு குடில் திறக்கப்பட்டு, சிறப்பு பிராத்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். கொரோனா தொற்று உலகை விட்டு நீங்கவும், புதிய ஆண்டு அனைவருக்கும் அமைதியையும் வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக அமைய வேண்டி பிரார்த்தனை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் இருதய ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இருதய ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.


வேலூர் மாவட்டத்தில் களைகட்டிய கிறிஸ்துமஸ்

வேலூர் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியது. மாவட்டம் முழுவதும் பல்வேறு தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பிரம்மாண்ட காட்சி அளித்தன. ஏயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் வகையில் வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கபட்டு, சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.

கத்தீட்ரல் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை

ஏசு கிறிஸ்து பிறப்பு விழா நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயம், கத்தீட்ரல் பேராலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. விழாவினையொட்டி கிறிஸ்தவ மக்கள் புத்தாடை அணிந்து பிரார்த்தனையில் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

ஜெபமாலை அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி 

ராமநாதபுரம் ஜெபமாலை அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். கொரோனா தொற்று முற்றிலுமாக ஒழியவும், விவசாயம், மருத்துவம், விஞ்ஞானம் வளரவும் வேண்டி பிரார்த்தனை நடைபெற்றது.

ஈரோடு : புனித அமல அன்னை ஆலயத்தில் சிறப்பு ஆராதனை

ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு ஆராதனை மற்றும் திருப்பலியில்  மறைவட்ட முதன்மை குரு ஜான்சேவியர் திருப்பலி நிறைவேற்றினார். குழந்தை இயேசுவின் சொரூபம் மக்கள் மத்தியில் கொண்டு வரப்பட்டு குடிலில் வைக்கப்பட்டது. கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன், போதிய சமூக இடைவெளியுடன் ஏராளமான கிறிஸ்தவர்கள் ஆராதனையில் பங்கேற்றனர்.

தூத்துக்குடி : அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தூத்துக்குடியில்  ஆட்டம், பாட்டத்துடன் கேரள் ரவுண்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் இயேசு கிறிஸ்து, குழந்தை ஏசு, கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமாக இளைஞர்கள் பங்கேற்று ஆடல் பாடலுடன் நடனமாடி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர்.




Next Story

மேலும் செய்திகள்