மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவருக்கு கொரானா தொற்று - சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை

மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.
மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவருக்கு கொரானா தொற்று - சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை
x
தமிழகத்தில் கொரோனா காரணமாக 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள் கடந்த 7 ஆம் தேதி திறக்கப்பட்டது. கட்டுப்பாடுகளுடன் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், சென்னை ஐஐடி மற்றும்  கிண்டி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறப்பு மருத்துவமனையில் அந்த மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கல்லுரியில் படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருவதாக மருத்துவ கல்லூரியின் முதல்வர் சங்குமணி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்