ரஜினியின் கட்சி தொடர்பாக கசிந்த தகவல்கள் உண்மையா? - ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டதாக வெளியான தகவல்
பதிவு : டிசம்பர் 16, 2020, 02:23 PM
நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் குறித்து வெளியான தகவல் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கும் படி ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் என்ற முழக்கங்களுடன், கட்சி தொடங்கும் அறிவிப்பினை அண்மையில் வெளியிட்டார், நடிகர் ரஜினிகாந்த். தான் தொடங்கப் போகும் கட்சியின் மூத்த நிர்வாகிகளை நியமித்த ரஜினி, ஜனவரியில் அரசியல் கட்சியைத் தொடங்க இருப்பதாகவும், டிசம்பர் 31-ல் அதற்கான தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து, ரஜினி கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கட்சியின் கொடி உள்ளிட்டவை எப்படி இருக்கும் என விவாதங்கள் பரபரத்தன. இந்த நிலையில்தான், நடிகர் ரஜினிகாந்த் புதிதாக தொடங்க இருக்கும் கட்சியின் பெயர், மக்கள் சேவை கட்சி என்றும், அதற்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டதாகவும் செய்திகள் கசிந்தன. 

அரசியல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கியது தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், இதுகுறித்த தகவல் இடம் பெற்றிருந்தது மேலும் பரபரப்பைக் கூட்டியது. சென்னை எர்ணாவூரை தலைமையிடமாகக் கொண்டு, அகில இந்திய மக்கள் சக்தி கழகம் என்ற பெயரில் இயங்கிவந்த அந்தக் கட்சி, செப்டம்பரில் மக்கள் சேவை கட்சியாக பெயர் மாற்றம் பெற்றதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கும் விதமாக, சின்னம் ஒதுக்கீடு செய்யக்கோரி மக்கள் சேவை கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. அதில், கட்சியின் முதல் விருப்பமாக பாபா படத்தில் ரஜினி பயன்படுத்திய இருவிரல் முத்திரையும், இரண்டாவது முன்னுரிமையாக ஆட்டோ சின்னத்தையும் ஒதுக்குமாறு கேட்கப்பட்டிருந்தது. 

இதனை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், பாபா முத்திரையுடன் இருக்கும் சின்னம், காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தோடு ஒத்திருப்பதால், ஆட்டோ சின்னத்தை ஒதுக்கி இருப்பதாக அறிவித்துள்ளது. ரஜினி நடிப்பில் மெகா ஹிட் அடித்த பாட்ஷா படத்தில், ஆட்டோக்காரன் கெட்டப் இடம் பெற்றிருப்பதால், இந்தத் தகவல் ரஜினி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. 

இன்னொருபுறம், கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கியது குறித்த செய்தியை, வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் மட்டுமே வெளியிடும் தேர்தல் ஆணையம், தற்போது டிசம்பர் மாதமே வெளியிட்டதோடு, ரஜினி கட்சி என தகவல் வெளியானதால் மக்கள் மன்ற நிர்வாகிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை நிர்வாகிகளை காத்திருக்கும் படி அறிவுறுத்தி இருக்கிறது, ரஜினி மக்கள் மன்றம். 

அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றிருக்கும் ரஜினி, தான் ஏற்கனவே கூறிய படி, டிசம்பர் 31ம் தேதி கட்சி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் போது, அனைத்து கேள்விகளுக்கும், யூகங்களுக்கும் விடை கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஜாக்கிசானின் "வாங்கார்ட்" பட டிரெய்லர் - நடிகர் மாதவன் வெளியீடு

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் வாங்கார்ட் படத்தின் டிரெய்லரை நடிகர் மாதவன் வெளியிடுகிறார்.

64 views

(25/12/2020) ஆயுத எழுத்து - நெருங்கும் தேர்தலும்... உருமாறும் பிரசாரங்களும்...

சிறப்பு விருந்தினர்களாக : பரந்தாமன், திமுக || ஜவகர் அலி, அதிமுக || ஜெகதீஷ், சமூக ஆர்வலர் || சி.கே.குமரவேல், மக்கள் நீதி மய்யம்

47 views

பிற செய்திகள்

சென்னையில் ஜெயலலிதா உருவச்சிலை திறப்பு

தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள ஜெயலலிதா சிலையை, முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

11 views

நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

8 views

கொடி சர்ச்சை தீப் சித்து - யார்?

டெல்லி செங்கோட்டையில் சீக்கிய மதக்கொடி ஏற்றப்பட்ட விவகாரத்தில் பாஜக எம்.பி.க்கு பிரசாரம் செய்த நடிகர் தீப் சித்துவே காரணம் எனக் குற்றம் சாட்டு எழுந்துள்ளது.

59 views

அமெரிக்காவில் முதல் பெண் நிதியமைச்சராகி சாதனை

அமெரிக்காவின் நிதியமைச்சராக 74 வயதான ஜனத் யெல்லன் பதவியேற்று உள்ளார்.

169 views

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு விவகாரம் - முதல்வர் நடவடிக்கை எடுப்பார்

வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை சார்பில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு ஏன் என்ற தலைப்பில், இணையதளம் வழியிலான கருத்தரங்கு சென்னையில் இன்று நடந்தது

41 views

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு விவகாரம் - முதல்வர் நடவடிக்கை எடுப்பார்

வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை சார்பில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு ஏன் என்ற தலைப்பில், இணையதளம் வழியிலான கருத்தரங்கு சென்னையில் இன்று நடந்தது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.